54 வயதில் 26 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம்!!

 
கிருஷ்ணன்

சேலம் மாவட்டம் தாரமங்கலம்  தெசவிளக்கு மாட்டையாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 54. இவர் தறித்தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு திருமணமாகி மனைவியும், மகனும்  உள்ளனர்.  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு  இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக    கிருஷ்ணனின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு மேச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.கிருஷ்ணன் மாட்டையாம்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

பள்ளி காதல்

அதே பகுதியில் வசித்துவந்த அவரது உறவினரான அய்யம்பெருமாளின்  வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அவரது  மனைவிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணிகளில் ஒத்தாசையாக இருந்தார்.  இதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பெருமாளின் மனைவி உயிரிழந்தார்.  இதன் பிறகும் கிருஷ்ணன்  அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி அனைத்துப் பணிகளிலும்  . இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அய்யம்பெருமாளின் மகள் விமலாவுக்கும்   பழக்கம் ஏற்பட்டது. முதுகலை பட்டதாரியான விமலா ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.  

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!
அய்யம்பெருமாள், அவருடைய 2 மகன்களுக்கு தெரியவரவே அவர்கள் இந்த முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  கடந்த 2  நாட்களுக்கு முன்பு  இருவரும்  வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து   அய்யம்பெருமாள் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இதனைத்  தொடர்ந்து காவல்துறையினர்   இளம் பெண்ணின் தந்தை உறவினர்களை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  கணவர் கிருஷ்ணனுடன் தான் செல்வேன் என விமலா உறுதிபட தெரிவித்துள்ளார்  அதனால்  விமலாவை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web