நாளை 5ஜி அலைக்கற்றை ஏலம்!! அதானி , ஜியோ குழுமங்களில் வெல்லப்போவது யார்?!!

 
5ஜி

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த மத்திய தொலைத் தொடர்பு துறை டிராய் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஏலம் விடும் பணி நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற  பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏலத்தை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மேற்கொண்டுள்ளது.

 5ஜி

தற்போது மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் 4.5லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகள். இந்த ஏலத்தை எடுக்க பெரும் நிறுவனங்களான  அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே விண்ணப்பித்துள்ளதால் ஏலம் வெகுவிரைவில் முடிந்து விடலாம்.  போட்டி பெரிய அளவில் இருக்காது என்று கூறப்படுகிறது.

 5ஜி 5g

முன் வைப்பு தொகை அடிப்படையில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ 14 ஆயிரம் கோடியும், ஏர்டெல் 5,500 கோடியும் முன் வைப்பு தொகையை செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன் வைப்பு தொகையை விட 10 மடங்கு கூடுதல் மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க இந்த 2 நிறுவனங்களுக்கு உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web