தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை தொடரும்... !
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 8) இரவு மாநிலத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக சில இடங்களில் வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
