ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்... 10 பேர் பலி, 260 பேர் காயம்!

 
நிலநடுக்கம்
 

போரின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானை இயற்கையும் சோதிக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்த சமங்கன் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் மஜார்-இ-ஷெரீப் நகரமாகும். 5.23 லட்சம் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் நிலம் கடுமையாக அதிர்ந்ததால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்தன.

நிலநடுக்கம் அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டதால், தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் காயமடைந்தனர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான காட்சிகள் பரவி வருகின்றன.

தலீபான் அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும், 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ராணுவ மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்துக்கு “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!