அயோத்தியில் 6 பிரம்....மாண்ட நுழைவாயில்கள்... !

 
அயோத்தி


உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அதே நேரத்தில் கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை நிர்மாணமும் அதே நாளில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 8000க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அரசியவாதிகள், தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலில்  தங்கக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி

அந்த வகையில்  லக்னெள-அயோத்தி சாலையில் மிகப்பெரிய நுழைவாயில் வளாகம் அமைக்கப்பட்டு அதற்கு ஸ்ரீராமர் நுழைவு வாயில் எனவும்,  கோரக்பூர்-அயோத்தி சாலையில் மிகப்பெரிய நுழைவு வாயில் வளாகம் கட்டப்பட்டு அதற்கு ஹனுமன் நுழைவுவாயில் எனவும்,  கோண்டா-அயோத்தி சாலையில் ஒரு மிகப்பெரிய நுழைவுவாயில் வளாகம் கட்டப்பட்டு அதற்கு லெட்சுமணன் நுழைவுவாயில் எனவும் பெயரிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  பிரயாகை-அயோத்தி சாலையில் ஒரு மிகப்பெரிய நுழைவு வாயில் பரதன் நுழைவு வாயில் எனவும்,   அம்பேத்கர் நகர்-அயோத்தி சாலையில் அமைய உள்ள நுழைவு வாயில்  ஜடாயு நுழைவுவாயில் எனவும்  ரேபரேலி-அயோத்தி சாலையில் அமைய உள்ள  நுழைவுவாயில்  காருண் நுழைவு வாயில் எனவும் அழைக்கப்படும்.

அயோத்தி


 ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள  கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இந்த நிகழ்வில்  பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் , ஆன்மிக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.  கும்பாபிஷேக   சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கியுள்ளன. மைசூர்  ஸ்தபதி அருண் யோகிராஜ் வடிவமைப்பில் உருவாகியுள்ள  ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.  ராமர் ஆலய கும்பாபிஷேகத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 100க்கும் மேலான சிறப்பு பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web