முன்பதிவு குறைவு... 6 தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து... !

 
ரயில் எக்ஸ்பிரஸ்
 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த பயணிகள் திரும்புவதற்காக தெற்கு ரயில்வே பல சிறப்பு ரெயில்களை இயக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், முன்பதிவு குறைவாக இருந்ததால், வரும் அக்டோபர் 22 முதல் 29 வரை இயக்கப்படவிருந்த ஆறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட்

இதன்படி, அக்டோபர் 22-ஆம் தேதி மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்வே நிலையத்தில் இருந்து கோட்டயம் நோக்கி புறப்படவிருந்த ரயில் (06121) மற்றும் அதற்கு எதிர்புறமாக 23-ஆம் தேதி மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலான ரயில் (06122) இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில்கள் (06153, 06154) 24 மற்றும் 26 ம் தேதிகளில் இயக்கப்பட இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்

அதனுடன், நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில் (06054) 28 ஆம் தேதி காலை 9.15 மணிக்கும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையேயான ரயில் (06053) 29 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கும் இயக்கப்படவிருந்தன. இவை இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!