6 விக்கெட் ரெக்கார்டு... உலக சாதனை படைத்தார் இந்தியவின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா!

 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தீப்தி சர்மா 6 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஒருநாள் போட்டியில் 2வது முறையாக ஒரே போட்டியில் இப்படி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார் தீப்தி சர்மா. 

முன்னதாக கடந்த 2016ல் இலங்கை அணிக்கு எதிராக 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இன்று வரை 20 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே தீப்தி சர்மாவின் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. 

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 31 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக சர்வதேச அளவில் மகளிர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

அதே சமயம் உலகளவில் இந்த சாதனையை செய்த இரண்டாவது பந்து வீச்சாளர் என்கிற பெருமையும் தீப்தி சர்மா பெறுகிறார். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் சேன் லூயிஸ் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் தீப்தி சர்மா.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா பேட்டிங்கிலும் 48 பந்துகளில் 39 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web