6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பு சேர்க்கை.. புதிய கல்விக் கொள்கையில் அதிரடி உத்தரவு!

 
பள்ளிக் குழந்தைகள்

இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மத்திய அரசின் புதிய கொள்கை  கடந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்தது.  பிரீகேஜி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உட்பட சில மாநிலங்கள்  இன்னும் அமல்படுத்தவில்லை.  

பள்ளிக் குழந்தைகள்

2024-25-ம் கல்வி ஆண்டு  ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில்  மாணவர் சேர்க்கைக்கான  பணிகள் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுவிட்டன.  இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு  சுற்றறிக்கை ஒன்றை   அனுப்பியுள்ளது. அதில், பிரீ கேஜியில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க 3 வயது நிரம்பியிருக்க வேண்டும்.   எல்கேஜி எனில்  4 வயதும், யுகேஜி எனில் 5 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பள்ளிக் குழந்தைகள்

ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை பள்ளியில்  சேர்க்க 6 வயது  நிரம்பியிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 3, 4, 5  ம்  வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web