60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று... இன்று இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று செப்டம்பர் 25ம் தேதி   கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 30 வரை  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 26ம் தேதி  கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழைக்கு  வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.    

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய மியான்மாா் கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் அதையெட்டிய மத்திய வங்கக் கடலில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

கன மழை

இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26ம் தேதி  தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு,  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னா், தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நாளை மறுநாள் கரையைக் கடக்கக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?