சென்னை முழுவதும் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவு அகற்றம்!

 
பட்டாசு

 

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் புதிய ஆடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் இரவு முழுவதும் இடைவிடாது பட்டாசு சத்தம் கேட்டு நகரம் முழுவதும் பண்டிகை ஆனந்தம் நிறைத்தது.

ஒரே நாளில் குவிந்த பட்டாசு குப்பைகள் இத்தனை டன்களா?!

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை 6 மணி வரை 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு கும்மிடிபூண்டி, பெங்குடி, கொடுங்கயூர் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பட்டாசு விபத்து

பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க பொதுமக்களிடம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதேநேரத்தில், தீபாவளி தினமான நேற்று மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வழக்கத்தை விட 61% அதிகமான 4,635 அழைப்புகள் வந்ததாகவும், அதில் தீக்காயங்களுக்காக மட்டும் 135 அழைப்புகள் வந்ததாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!