இன்று தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள்!!

 
அரசு பேருந்து

வார இறுதி நாட்கள், பண்டிகள் தினங்கள், சுபமுகூர்த்த நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்   செப்டம்பர் 9ம் தேதி, செப்டம்பர் 10ம் தேதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு  செப்டம்பர் 8ம் தேதி  சென்னை   மற்றும் பிற இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.   இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சிறப்பு பேருந்து


இந்த வகையில் இதுவரை 10545 பயணிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள  முன்பதிவு செய்துள்ளன.  பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 8ம் தேதி தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து   கோவை, மதுரை திருநெல்வேலி திருச்சி, சேலம் உட்பட பல்வேறு  இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும்   மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளது.  அதே போல் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னை பெங்களூர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  

அரசு பேருந்து

இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 9,299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் www.tnstc.in ஆன்லைன் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை செப்டம்பர் 8ம் தேதி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா முடிவடைவதை முன்னிட்டு வேளாங்கண்ணியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி தஞ்சாவூர், சிதம்பரம் பாண்டிச்சேரி திண்டுக்கல், மணப்பாறை ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை   ஊர்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web