ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா.... இன்று 600 சிறப்பு கூடுதல் பேருந்துகள்... !!

 
அரசு பேருந்துகள்

இன்று  அக்டோபர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் . நாளை மகாளய அமாவாசை. சென்னையில் இருந்து விடுமுறையை கொண்டாடவும், சொந்த ஊர் செல்லவும் ஏராளமானவர்கள் பயணம் மேற்கொள்வர். இதனால் சென்னையில் இருந்து ஒவ்வொரு வார விடுமுறை தினங்களிலும் சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை முன் பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்ந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்து

அதன்படி இன்று கோவை, மதுரை, திருச்சி திருநெல்வேலி, சேலம் கன்னியாகுமரி மற்றும் பெங்களூருவுக்கும் சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தின் பிற பகுதிகள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் நகரின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே   அறிவிக்கப்பட்டுள்ளது.    

சிறப்பு பேருந்து

இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, சேலம், கோவை, பெங்களூரூ உட்பட பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 14ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு   பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் www.tnstc.in மற்றும்  tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web