ஒரே நாளில் 61000 மின்னல்கள்... 12 பேர் பலி !! பீதியில் பொதுமக்கள்!!

ஒடிசா மாநிலத்தில் மேகவெடிப்பு , புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியில் வர இயலாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த கனமழை மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது.
ஒடிசாவில் சனிக்கிழமை செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை மட்டும் 61,000 மின்னல்கள் தாக்கியுள்ளன. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்திய வானிலை மையம், செப்டம்பர் 7ம் தேதி வரை ஒடிசா மாநிலம் முழுவதும் தீவிரமான வானிலை இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்றும், அதன் தாக்கத்தால், ஒடிசா முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. “வாரத்தின் பிற்பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரில் 4 பேர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பலங்கிரில் 2 பேரும் அங்குல், பௌத், தேன்கனல், கஜபதி, ஜகத்சிங்பூர் மற்றும் பூரியில் வசித்து வருபவர்கள். இதனை சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தவிர, கஜபதி மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒடிசா அரசு சார்பில் தலா ரூ4 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என சத்யபிரதா சாஹு கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!