செம ஆபர்... ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ62லட்சம்!

 
குழந்தை

 தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் சரிவை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் தென்கொரியாவில் பல செயல்பாடுகளை அந்நாட்டு அரசு முன்னெடுத்து வருகிறது.   2022ம் ஆண்டு நிலவரப்படி  0.78 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2026ல்  0.59 ஆக சரியலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .  

குழந்தை

1977ம் ஆண்டுக்கு பின் இல்லாத வகையில் மக்கள் தொகை 3.5 கோடி அளவிற்கு சரியலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.இதிலிருந்து நாட்டை மீட்க  தென்கொரியாவில் உள்ள Booyoung குழுமம் பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த  கட்டுமான நிறுவனம் ஒரு  குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 3 குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ. 1.82 கோடி பரிசாக வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

 

குழந்தை

இதே போல பியாங்யாங் குழும நிறுவனம் குழந்தை பெற்றுக் கொண்ட தனது ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 43.58 கோடி வழங்கி இருப்பதாக  தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதங்களை அதிகரிக்க சீனாவிலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அதன்படி  உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான Trip.com என்ற சீன நிறுவனம், தங்களது ஊழியர்களின் குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை ஒவ்வொரு வருடமும்   இந்திய மதிப்பில் ரூ.1.1 லட்சம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web