பேருந்துகள் மோதி சாலை விபத்தில் 63 பேர் உயிரிழப்பு!

 
உகாண்டா
 

மேற்கு உகாண்டாவில் கம்பாலா–குலு நெடுஞ்சாலையில் நடந்த பெரும் சாலை விபத்தில் 63 பேர் பலியாகினர். எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு பேருந்துகள், லாரி மற்றும் கார் ஆகியவற்றை முந்திச் செல்ல முயன்றபோது மோதியதில், பல வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தன.

விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் கிரியாண்டோங்கோ நகர மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பப்பட்டனர். நிலைமை தீவிரமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர். உகாண்டாவில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். 2024ஆம் ஆண்டில் மட்டும் 5,144 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!