பெரும் சோகம்... விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து கோர விபத்து... 64 பேர் ஆற்றில் மூழ்கி பலி.!

 
நைஜீரியா


 
நைஜீரியாவில் மாகாணத்தில் ஆற்றில் விவசாயிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விவசாயிகள் நிரம்பிய இந்த படகு வயல்களை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை கும்மி நகருக்கு அருகே 70 விவசாயிகளை வயல்களில் இறக்கிவிட இருந்த மரப் படகு திடீரென கவிழ்ந்தது.

படகு

இச்சம்பவம் குறித்த  தகவல்கள் கிடைத்ததும்  அதிகாரிகள் உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 3  மணி நேரத்திற்குப் பிறகு 6 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் நீரில் மூழ்கினர். கும்மி பகுதியில் படகு மூழ்கிய 2வது சம்பவம் இதுவாகும்.இது குறித்து உள்ளூர் அதிகாரி அமீன் நுஹு ஃபலாஹே என்ற  நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன என்றார். நீரில் மூழ்கியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படகு

தினமும் 900க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் வயலுக்குச் செல்ல ஆற்றைக் கடந்து செல்ல 2 படகுகள் மட்டுமே உள்ளன. இதனால் படகுகள் எப்போதுமே  நிரம்பி வழிகின்றன. ஏற்கனவே கனிம வளங்களைக் கட்டுப்படுத்தும்  கும்பலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்ஃபாரா மாநிலம் இந்த முறையும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை