அதிர்ச்சி... சத்துணவு சாப்பிட்ட 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி... ..!!

 
மருத்துவமனை

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும்  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் அன்னமையா மாவட்டத்தில், தெக்குலபாலம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழக்கம் போல் வழங்கப்பட்டது.  

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!

இதனை சாப்பிட்ட மாணவர்களில்  64க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.  இங்குள்ள மாணவர்கள் சிலர் சமைக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்து உள்ளதாக தெரிவித்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனடியாக தகவலின் பேரில் விரைந்த   அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சத்துணவு மையங்கள்


மாணவர்களை  பரிசோதித்த மருத்துவர்கள் உணவில் விஷம் இல்லை என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் எதனால் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து தீவிர   விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவம் குறித்து   மாவட்ட வருவாய் அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உணவு சமையலர்களிடம்    விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web