இன்று 69 வது தேசிய விருதுகள் அறிவிப்பு!!

 
தேசிய விருதுகள்

2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை  5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிக்கிறார். சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.   2021ம்  ஆண்டு தேசிய விருதுகளை பொறுத்தவரை   பல மொழிப் படங்கள் போட்டியிடுகிறது.  தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த கர்ணன், சூர்யா, மணிகண்டனின்  ஜெய் பீம், ஆர்யாவின்   சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபுவின்   மாநாடு  படங்கள்  இடம்பெறுகின்றன.  இந்த படங்களில் பணியாற்றிய பிரபலங்களுக்கும் விருதுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

தேசிய திரைப்படவிருது வழங்கும் விழா

தமிழ் நடிகர்கள்

சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன், சிம்பு,

நடிகை 

லிஜோமோல் ஜோஸ்

இயக்குனர்கள்

டி.ஞானவேல், மாரி செல்வராஜ் ,வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்

தட்டி தூக்கிய ஜெய்பீம்!! இந்திய அளவில் முதலிடம்!!

தெலுங்கு  & ஹிந்தி

தெலுங்குத் சினிமாவில் பொறுத்தவரை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ , சூர்யவன்ஷி, 83, ஆகிய படங்கள் போட்டியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  2020ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியிருந்தார். அதே போல் ஜெய்பீம் படத்தில் நடித்ததற்காக வாங்குவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்படவுள்ள பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெறும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எந்தெந்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படும் , எந்தெந்த பிரபலங்களுக்கு விருது அறிவிக்கப்படும் என்பது இன்று மாலை 5 மணிக்கு தெரிந்துவிடும்  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web