6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 6 முதல் 12 ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.அதன்படி 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் 22 ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதேபோல 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி முதல் 21 ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 23 ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜனவரி 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் உடனடியாக பாடங்களை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!