6 வயது சிறுவன் மர்ம மரணம்.. தாயின் கள்ளக்காதலன் அதிரடியாக கைது.. போலீசார் தீவிர விசாரணை!

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நேரு நகரில் வசித்து வருபவர் ஆனந்தன், இவரது மனைவி தனம். இவர்களுக்கு ஷோபனா என்ற 8 வயதில் மகளும், குகன் என்ற 6 வயதில் மகனும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. தனம் தனது குழந்தைகளுடன் நேரு நகரில் வசித்து வருகிறார். குடும்பத்திற்காக பரந்தூர் நில எடுப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் ராஜேஷும் பணிபுரிகிறார். செவிலி மேட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால், அவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தனம் வீட்டுக்கு அடிக்கடி செல்வதை ராஜேஷ் வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படித்தான் கடந்த சனிக்கிழமை மாலை தனம் வீட்டுக்கு ராஜேஷ் வந்துள்ளார். செல்லும் போது, ராஜேஷ், 2 குழந்தைகளையும் தன்னிடம் கூறி அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், அப்போது தாய் தலையிட்டு குழந்தைகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளார். உடனே தனம், குழந்தைகளை ராஜேஷ் அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
பின்னர் அன்றிரவு ராஜேஷ் தனத்தின் 2 குழந்தைகளையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் காலையில் ராஜேஷ் அவருக்கு போன் செய்து 6வயது மகன் குகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்து.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினார். பின் குகனை பைக்கில் உட்கார வைத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்... அங்கு டாக்டர்கள் குகனை பரிசோதித்து சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது சிறுவனின் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததை டாக்டர்கள் கவனித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தனத்தின் மகள் 3-ம் வகுப்பு படிக்கும் ஷோபனா, ராஜேஷ் வீட்டில் அன்று நடந்ததை போலீஸாரிடம் தெரிவித்தார். அதையடுத்து ராஜேஷ் வீட்டிற்கு விரைந்த போலீசார் குகனின் ரத்தக்கறை படிந்த துணிக்கடைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவன் மரண வழக்கை சந்தேக கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேஷை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னே முழு விவரம் தெரிய வரும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!