கர்நாடக நிலச்சரிவில் 7 பேரின் உடல்கள் கண்டெடுப்பு... தொடரும் மீட்பு பணிகள்!

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்கு அடியில் புதையுண்ட லாரி டிரைவர் அர்ஜுன் உயிருடன் மீட்கப்பட மொத்த கேரள மாநிலமும் பிரார்த்தனை செய்து வருகிறது.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா ஷிரூர் மலைத்தொடரில் கோவா-மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோழிக்கோடு கன்னடிக்கல் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (30) என்பவர் தனது லாரியுடன் காணாமல் போனார்.
கங்காவலி ஆற்றின் கரையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், லாரி நீருக்கடியில் உள்ளதா என்பதைக் கண்டறிய கடற்படையின் உதவியை நாடியுள்ளதாகவும், மண் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அர்ஜூன் உள்பட 10 பேர் பலியாகினர். ஆற்றில் ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அர்ஜூன் சென்ற லாரி ஆற்றில் விழவில்லை. கனமழையால் மீட்பு பணிகளுக்கு சவாலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து விறகு கொண்டு வருவதற்காக முக்கத்தை சேர்ந்த மனாப் என்பவரது லாரியுடன் அர்ஜூன் கடந்த 8ம் தேதி சென்றார். கடந்த 16ம் தேதி தான் அவரது வீட்டுக்கு இந்த விபத்து குறித்து அழைப்பு வந்தது. பேரிடர் நடந்த இடத்தில் ஜிபிஎஸ் கருவி இருப்பது குறித்து பாரத் பென்ஸ் நிறுவனம் லாரி உரிமையாளரிடம் தெரிவித்த போது தான் அர்ஜூன் வீட்டினருக்கு விபத்து குறித்த தகவல் தெரிந்தது.
கடற்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன் மண்ணுக்கு அடியில் சிக்கினாரா அல்லது கங்காவலி ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அர்ஜூன் மீட்கப்படாத நிலையில், அவர் ஓட்டிச் சென்ற லாரியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கனமழை, நிலச்சரிவு, சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்றைய மீட்புப் பணி இரவு 8 மணிக்கு முடிவடைந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு மீண்டும் தொடங்கியது. பேரிடர் மேலாண்மை படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.அர்ஜுனுக்காக கேரள அரசும், காங்கிரஸ் தலைமையும் தலையிட்ட மூன்றாவது நாளில் மீட்புப் பணி தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதில் கர்நாடகா அரசு கவனம் செலுத்தியது. இது மக்கள் தொகை குறைந்த மலைப்பாங்கான பகுதி. லாரி ஓட்டுநர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த கடைக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேநீர் கடை உரிமையாளர் லக்ஷ்மன் நாயக், அவரது மனைவி சாந்தி மற்றும் அவர்களது மகன் ரோஷன் ஆகியோரின் உடல்கள் ஆற்றில் நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டன. மகள் அவந்திகாவின் சடலமும், லக்ஷ்மனின் தாயின் உடலும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர்கள் முருகன் (45), சின்னா (55) ஆகியோரின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா