இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்
 

தென்கிழக்கு அரபிக்கடலில், கேரளக் கடலோரத்தை அண்டிய பகுதியில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுத்து அதே பகுதியில் நிலைத்துள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும், அது அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் நோக்கி நகர்ந்து வலுப்பெறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன மழை

கன முதல் மிக கனமழை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால்.கனமழை வாய்ப்பு: கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!