சத்தமே இல்லாமல் வீட்டில் பதுங்கி இருந்த 7 அடி பாம்பு.. பார்த்து ஷாக்கான குடும்பத்தார்..!

 
 7 அடி நீளமுள்ள பாம்பு

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் இருந்த மேஜையில் இருந்த பொருட்கள் திடீரென கீழே விழுந்தன. இதனால் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அல்லது திருச்சி விமான நிலையம் TRZ

ஹாலில் இருந்த மேஜையில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. உடனே அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து கதவை சாத்தினார். அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டிற்குள் பாம்பு இருப்பதை தேடி பார்த்தபோது, ​​எங்கோ சென்று மறைந்து கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

Firefighter Injured After Oxygen Cylinder Explodes In Trichy | திருச்சி:  ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் படுகாயம்! மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து, வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்க விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்யவர்தன் தலைமையிலான வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக காட்டுக்குள் விடப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் பாம்பு ஒன்று வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web