தலைநகரை தலைகீழாக்கிய புயலில் 7 பேர் பலி... 10000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு!!

 
சென்னை

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னையில் மிகமிக கனமழை கொட்டித் தீர்த்தது . இந்த  மழையால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக  நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 மிக்ஜாம் புயலால் தொடர்ந்து 12 மணிநேரம்  கனமழை பெய்தது.  நேற்று முதல்  இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். அதேவேளையில், மின்சாரம் பாய்ந்தும், கட்டடம், மரம் விழுந்தும் 7 பேர் உயிரிழந்தனா்.

சென்னை


சென்னை அருகே உள்ள கானத்தூா் இந்திரா காந்தி தெருவில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை வீட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் இங்கேயே  கடந்த 5 ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வந்தனர்.  தொடர் கனமழையால் இந்த வீட்டின் அருகே மொட்டை மாடியில் புதிதாக கட்டப்பட்டிருந்த சுவா் திடீரென இடிந்து விழுந்தது.இதனால்   கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் அப்ராகித் (45), முகம்மது தவ்பீக் (48),ஹாசிம் ஆகியோா் மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் ஷேக் அப்ராகித், முகம்மது தவ்பீக் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயமடைந்த ஹாசிமை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ்

 
பெசன்ட்நகா் பகுதியில் வசித்து வருபவர்  சோ்ந்தவா் முருகன்  . இவா் மழை பெய்யும்போது, அங்குள்ள மரம் முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.  அவரை   மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் பரிதாபமாக  உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வசித்து வருபவர்  பத்மநாபன்  . சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பேக் தைக்கும் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.லோன் ஸ்கொயா் சாலையில் ஆவின் விற்பனையகம் அருகே சென்றபோது, அங்கு கீழே கிடந்த மின்சார வயரை மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  


துரைப்பாக்கம் பாண்டியன்நகா் பகுதியில் வசித்து வருபவர்  கணேசன் . இவர்  விநாயகா் கோயில் தெருவில் நடந்து செல்லும்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.   வண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு முதியவா் ,  பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 60 வயது  அடையாளம் தெரியாத  பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் சென்னையில் பெய்த பெருமழை காரணமாக ஒரே நாளில் 7 பேரும், ஏற்கனவே 3 பேரும் உயிரிழந்தனா்.
 .

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web