பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த 7 சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் இன்று செப்டம்பர் 29ம் தேதி திங்கட்கிழமை மீண்டும் திறந்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில் முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிறப்பித்த உத்தரவின் பேரில் சுற்றுலா தலங்கள் திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தற்காலிகமாக மூடப்பட்ட காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் உள்ள கூடுதல் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். ஏப்ரல் 22 ஆம தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த 50 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

ஏற்கனவே ஜூன் மாதத்தில் பஹல்காமின் சில பகுதிகள் உட்பட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மேலும் ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
