செம.... கோழி முட்டையில் 7 உலக அதிசயம்... பள்ளி மாணவி அசத்தல் சாதனை!

 
மாலதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முட்டையில் உலக அதிசயங்களை ஓவியமாக வரைந்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.சாதனைகள் பலவிதம். எந்த சாதனைக்கும் வயதும், பணமும் தடையில்லை என்பதை தான் மீண்டும் ஒரு முறை விருதுநகர் பள்ளி மாணவி நிரூபித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  விஜயகரிசல்குளத்தில் வசித்து வரும் தம்பதி   பாண்டியராஜ், உமா மகேஷ்வரி . இவர்கள் இருவருமே  பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கூலித் தொழிலாளிகள்.

கோழி முட்டை

இவரது மகள் 16 வயது மாலதி  அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து  வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வத்துடன் இருந்து வந்தார். மிக சமீபமாக அதீத ஆர்வத்துடன் தேடித்தேடி அனைத்து போட்டிகளிலும் பங்கு கொண்டு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். இவருடைய  அடுத்தகட்ட முயற்சியாக கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க திவீரமாக யோசித்து வந்தார்.

மாலதி

அதன்படி தற்போது  உலக அதிசயங்களான தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர், சிச்சென் இட்சா, பெட்ரா, மச்சு பிச்சு, மீட்பாரான கிறிஸ்து சிலை, கோலோசியம் ஆகிய 7 அதிசயங்களை முட்டையில் 48 நிமிடங்களில் தத்ரூபமாக ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்  கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவர் இதுவரை எந்த ஓவிய ஆசிரியரிடமும் முறையாக கற்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.  இவருடைய தனித்திறன் மற்றும் ஆர்வத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web