நோன்பு கஞ்சி தயாரிக்க 7,040 டன் பச்சரிசி... முதல்வர் அதிரடி உத்தரவு!

 
ரமலான்

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில்  நோன்பு கஞ்சி தயாரிக்க 7,040 டன் பச்சரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்   நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ரமலான்

அதனை போலவே  இந்த ஆண்டிலும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.  2024ல்  ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க  பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு   பச்சரிசி வழங்கப்படும்.  

ரமலான்


 அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 2024ல்  7,040 டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட உள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web