மாஸ்... 71 நிமிடங்களில் 71 பேருக்கு டாட்டூ... கேப்டன் பிறந்த நாளில் உலக சாதனை!
தமிழகத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனரும், திரை உலகில் முன்னணி நடிகராகவும் இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் அரசியல்வாதி நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்து மக்களால் கேப்டன் என அழைக்கப்படுகிறார். கேப்டன் 2024 டிசம்பர் 28 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 25ம் தேதி கேப்டனுக்கு 71 வது பிறந்தநாள். இதனை அவரது கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் காலை முதலே பல்வேறு உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாள் என்பதால் 71 நபர்களுக்கு 71 நிமிடத்தில் 71 டாட்டூ கலைஞர்கள் மூலம் டாட்டூ போடப்பட்டது.
இந்தக் கலைஞர்கள் கேப்டன் விஜயகாந்தின் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த டாட்டூ போடும் நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!