72 மாணவர்களுக்கு சராமாரி அடி!! உதவி தலைமை ஆசிரியர் பணி இடை நீக்கம்!!!

 
adi

அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மீது 72 மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரமள் மாவட்டம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் பயணியாற்றும் உதவி தலைமை ஆசிரியர் நந்தகோபால கிருஷ்ணன் அங்கு பயிலும் 72 மாணவர்களை தாக்கியதாக புகார்கள் எழுந்தன.

விழுப்புரம்

மாணவர்கள் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், திடீªர்னறு தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் திடீரென்று முற்றுகை போராட்டத்தால் குதித்ததால் செஞ்சி அரசு பள்ளியில் பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் நந்தகோபால கிருஷ்ணன் அதிரடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்

அரசு பள்ளியில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் திடீரென்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவு எதுவும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டத்தை கையில் எடுத்தோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் தெரிவித்த கருத்து ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web