73 கிலோமீட்டர்.. 13 மணி நேர நடைப்பயணம்!! இந்தியாவை கடந்த மனிதர்!!

 
rupareyla

பெங்களூருவில் வசித்து வருபவர்  விகாஸ் ருபாரெயிலா. இவர் ஒரு மாரத்தான் வீரர்.  இவருக்கு வயது 51 . இவர்  பெங்களூருவைச் சுற்றி சைக்கிளிங் செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்து வருகிறார்.  இந்தியாவின் சுதந்திர தின நாளில் வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டும் யோசனை செய்தார் . அதன்படி பெங்களூருவுக்குள்   நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். இந்திய வரைபடத்தின் அவுட்லைனை தனது நடைப்பயணம் மூலம் ஜிபிஎஸ் கலைவடிவத்தை உருவாக்க திட்டமிட்டார். அதன்படி, ஆகஸ்ட் 15 காலை 7.45 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் ராஜாஜி நகர் ஓரியன் மால் லோகேஷனில் தனது நடை பயணத்தை தொடங்கினார்.


சுமார் 73 கிலோமீட்டர் தூரம், 13 மணி நேரம் 25 நிமிடங்கள் நகருக்குள்ளேயே நடந்து, தொடங்கிய இடத்திற்கே  மீண்டும் வந்து சேர்ந்தார்.  இவரது பயணம் முடிவடையும்போது மணி அதிகாலை 1.40. தனது டிவிட்டரில் இது குறித்து  ஒரு வீடியோவை பகிர்ந்து, சுதந்திர தின வாழ்த்துகளை கூறியிருந்தார் ருபாரெயிலா.அதில் "அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இதனை ஒரு நாளில் செய்து முடிக்க இயலும் என நானே நம்பவில்லை. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி" 

ரூபாரெயிலா


தனது இந்த பயணத்திற்காக ருபாரெயிலா ஸ்டார்வா என்ற செயலியை பயன்படுத்தினார்.  ஜிபிஎசின் உதவியுடன் ஒருவரது நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் ஒரு செயலியாக உள்ளது. கடும் மழை, மொபைலில் சார்ஜ் குறைந்தது, பவர் பேங்க் சார்ஜ் குறைந்தது என எந்தத் தடங்கலும் இன்றி பயணத்தை இனிதே நிறைவு செய்தார். ருபாரெயிலாக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web