இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கல... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!!

 
உணவு

சர்வதேச அளவில் இந்தியா   5வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. வெகுவிரைவில் 3வது இடத்தை அடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். மற்றொரு புறம் நிலவையும், சூரியனையும் ஆய்வு செய்ய ராக்கெட்டுகள் செலுத்தி தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிர்ச்சி தரும் புள்ளி விபர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உணவு

அதன்படி  இந்தியாவில் வசித்து வரும்  74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கி அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த தரவுகள் அனைத்தும் 2021 ம் ஆண்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலை மிகவும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளது.  

உணவு


குறிப்பாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின்விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், மாதச் சம்பளம்  28 முதல் 37 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின்  வளர்ச்சி மக்களுடன் சேர்த்து தான் இருக்க வேண்டுமே தவிர, தனியாக நாடு வளர முடியாது. அதனால் மக்களின் அடிப்படை தேவையான உணவே ஆரோக்கியமாக கிடைக்காத போது, நாடு எப்படியான வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறலாம்   என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web