லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைப்பு... ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் நகரில், சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக விளங்கும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்காக 75 அடி உயர சிலை அமைக்கும் திட்டம் நடைமுறைப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

லத்தூர் நகரில் ஏற்கனவே அம்பேத்கர் பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவின் மையப்பகுதியில், அம்பேத்கரின் உயர்ந்த கொள்கைகளையும், அவரின் சமூக பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த பிரம்மாண்ட சிலை அமைக்கப்படவுள்ளது. சிலை வடிவமைப்பு, சுற்றுப்புற பசுமை வளர்ப்பு, நடைபாதைகள் மற்றும் வெளிச்ச அமைப்புகள் உள்ளிட்ட பணிகளும் இதன் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து லத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார் கூறியதாவது:
“இத்திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதியுடன் மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஆனால் திட்டத்தின் முழுமையான நிறைவேற்றத்துக்கு கூடுதலாக ரூ.12 கோடி தேவைப்படுகிறது. அந்த தொகையை பெறுவதற்கான முயற்சிகளை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வருவேன்” என்றார்.அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குள் சிலை அமைப்பு நிறைவடையும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
