தனியார் தொழிற்சாலையில் 75 பெண்கள் வாந்தி, மயக்கம்!! 15 பேர் கவலைக்கிடம்!! விஷமான உணவு!!

 
வாந்தி மயக்கம்

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம்  வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் தனியார் தொழிற்சாலை 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வயரிங் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர் தொழிலாளர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் மொத்தம் 3 ஷிப்டுகள் முறையில் பணி நடைபெற்ற வருகிறது.

வாந்தி மயக்கம்

அதன்படி நேற்று  அக்டோபர் 7ம் தேதி இரவு ஷிப்ட் தொழிலாளர்கள் சுமார் 3000க்கும்  மேற்பட்டோர் தொழிற்சாலையில் உள்ள கேண்டினில் உணவை சாப்பிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வாந்தி மயக்கம்

அதில் உடல்நிலை மோசமடைந்த பெண் ஊழியர்கள் சிலர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு குறைந்த ஊழியர்கள் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web