பஞ்சாயத்துக்கு பஞ்சமே இல்ல... பிக்பாஸ் போட்டியாளராக 777 சார்லி பட நாய்..?!

 
சார்லி777

சின்னத்திரை சீரியல்களை காட்டிலும் விறுவிறுப்பாக ரசிகர்களை உற்சாகத்துடன் பார்க்க வைப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அக்டோபர் 1 முதல் தமிழில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியுள்ளது. இதற்காக டாப் சீரியலின் நேரம் மாற்றி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் நடைபெற்று வருகிறது.   தமிழ், தெலுங்கில் ஏழாவது சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில்  தமிழில் நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.  

சார்லி777

கனடாவில் 10 வது சீசனை  நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் கன்னடத்தின் பத்தாவது சீசனில்தான் ‘777 சார்லி’ பட நாய் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளது. இந்த  அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடா மொழிகளில் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான   ’777 சார்லி’ திரைப்படத்தில் நடித்திருந்த நாய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.   சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் ’777 சார்லி’ திரைப்படம் வென்றது. இந்த நாய்தான் தற்போது பிக் பாஸ் கன்னடத்தில் போட்டியாளராக கலந்து கொள்ள  இருக்கிறது. இந்த தகவலை கிச்சா சுதீப் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.  

சார்லி777
 இதற்காக தேவையான அதிகாரப்பூர்வ வழிமுறைகளை எல்லாம் தாங்கள் பின்பற்றி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.  சார்லியின் பயிற்சியாளர்  பிரமோத் சில காலத்திற்கு பிக் பாஸ் வளாகத்தின் வெளியே இருக்க வைக்கப்படுவார்.  சாதாரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியாளர்களுக்குள் சண்டை அதிகம் வரும். இதில் நாய் ஒன்று கலந்து கொண்டு என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன்  எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web