ரீல்ஸ் விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ... 7ம் வகுப்பு மாணவன் மரணம்!

 
கரண்
 

 

மத்திய பிரதேச மாநிலம், மொரீனாவைச் சேர்ந்த 11 வயதுடைய 7ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், கழுத்தில் கயிற்றால் இறுக்கிக் கொண்டு ரீல் வீடியோ பதிவு செய்ய முற்பட்ட போது, எதிர்பாராமல் கயிறு கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கழுத்தில் கயிற்றை இறுக்குவது போல் வீடியோ பதிவு செய்ய முற்பட்ட மாணவன், எதிர்பாராமல் கயிறு கழுத்தை இறுக்கி, மூச்சு திணறியதும், எதிரே இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது நண்பர்கள், மாணவனின் மூச்சுத்திணறலை, ரீல்ஸ் வீடியோவுக்கான அவனது நடிப்பு என்று தவறாக நினைத்துக் கொண்டனர். 
அது மாணவனின் நடிப்பு கிடையாது... நிஜமாகவே கழுத்து இறுக்கி மாணவன் மூச்சு திணறியிருக்கிறான் என்று நண்பர்கள் உணர்ந்துக் கொள்வதற்குள் மாணவன் பரிதாபமாக தனது உயிரை இழந்து விட்டிருந்தான். 


இந்த துயர சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. உயிரிழந்த மாணவன், லேன் ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் மற்ற மாணவர்களுடன் கடந்த சனிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கயிற்றில் தொங்குவதைப் போல வீடியோ ரீல்ஸ் உருவாக்க முயன்றுள்ளான். துரதிர்ஷ்டவசமாக கயிறு கழுத்தை இறுக்கி அவனது உயிரைக் காவு வாங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது. 
அந்த வீடியோவில் ப்ளாட்டில் உள்ள சீஷம் மரத்தில் ஒரு கயிறு தொங்குவது தெரிகிறது. கரண் தனது கழுத்தில் கயிற்றைப் போடுவதைக் காண்கிறார், மற்றொரு மாணவர் இந்த செயல்களை வீடியோவாக பதிவு செய்யும் போது செயலின் ஒரு பகுதியாக கயிற்றை மாட்டியிருக்கும் மாணவர் உயிருக்குப் போராடுவது போல் நடிக்கிறார். உண்மையான ஆபத்தை அறியாமல் இதை வீடியோவாக பதிவு செய்தவர் உட்பட சுற்றிலும் நிற்கும் நண்பர்கள், அவன் ரீல்ஸ் வீடியோவுக்காக நடிப்பதாக நம்பினர். ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த நண்பர்கள் ஒருகட்டத்தில் அவனிடம் விரைந்து செல்கின்றனர். ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பீதியடைந்த அவர்கள், போனை வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ஆம்புலன்ஸ்
தகவலின்படி, உயிரிழந்த மாணவன் கரண் பர்மர்  7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை பள்ளி முடிந்து திரும்பிய இவர், லேன் ரோட்டில் உள்ள தனது வீட்டின் முன்புறம் உள்ள காலிப் பகுதியில் விளையாடச் சென்றார். அந்த காலி பகுதியில் எழுப்பப்பட்டிருந்த சுவர் மீது நின்று கொண்டு, கழுத்தில் கயிற்றை வைத்து வீடியோ எடுத்து, நழுவி விழுந்ததால், கயிறு இறுகி மூச்சுத் திணறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் கிடைத்ததும், கரனின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு அலறியடித்தப்படி ஓடிச் சென்று அவரை கயிற்றில் இருந்து அகற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சம்பவத்தையடுத்து அம்பாக் காவல்நிலைய மருத்துவமனைக்கு சென்று மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி .வைத்து விட்டு இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!