7ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!

 
தீப்திகா

இந்த காலத்து பள்ளிப் பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம் என்கின்றனர். ஓடியாடி விளையாடினாலே எல்லா அழுத்தங்களும் சரியாகி விடும். பள்ளி முடிந்து வீட்டில் கையில் மொபைல் போன்களுடன் இருப்பதால் உடல் உழைப்பு என்பதே கிடையாது . இதனால் உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இயலாமையால் மன அழுத்தம் வந்துவிடுகிறது.  இதனை எதிர்கொள்ள தெரியாமல் பள்ளிப்பிள்ளைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி  .

தற்கொலை

இவர், வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீப்திகா . இவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தீப்திகா அருகில் உள்ள தோழியின்   வீட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். இரவு 7 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தீப்திகா, திடீரென வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆம்புலன்ஸ்


விளையாட சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தீப்திகாவின் அண்ணன் ரித்தீஸ்  , தங்கை தீப்திகாவை தேடினார். பின்னர் பூட்டி இருந்த அறை கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீப்திகா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தற்கொலை செய்த மாணவி தீப்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம்  குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web