செப்டம்பர் 11 வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை!!

 
இடி மின்னல் மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். கோவை,  நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.  

மழை

செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

இன்று  பிற்பகல் 2 மணி  வரை கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,  மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web