கரும்புக்கான கொள்முதல் விலை 8 சதவீதம் அதிகரிப்பு... மத்திய அமைச்சரவை அதிரடி!

 
அனுராக் தாகூர்

விவசாயிகள்  போராட்டம் 9 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று போலீசாரின் ரப்பர் குண்டால் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதனால் தலைநகரில் பதற்றநிலை நீடித்து வருகிறது. விவசாயிகள் தற்காலிகமாக  2 நாட்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இதுவரை நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில்  5 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது.

இந்நிலையில்  பிரதமர்   மோடி தலைமையில் நேற்று  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  அக்டோபர்   முதல் ஒரு  குவிண்டால் கரும்புக்கு கொள்முதல் விலை ரூ340 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ315 ஆக இருந்து வந்த நிலையில்  தற்போது 10.5%க்கும்  அதிகமாக சர்க்கரை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.  


மேலும் இது குறித்து   “உலகிலேயே கரும்புக்கான அதிகபட்ச விலை இந்தியாவில் மட்டுமே  அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நலன் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு  தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் ஹரியான மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்   நிலையில், கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிர் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு ரூ1,179 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும்  இதற்கான ஒப்புதலை  மத்திய அமைச்சரவை   அளித்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web