800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டி.. 2வது தங்கம் வென்று அசத்திய அமெரிக்க வீராங்கனை!
ஒலிம்பிக் (2024) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி 8 நிமிடம் 11.04 வினாடிகளில் நீந்தி தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இது அவருக்கு 2வது தங்கம். ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் மொத்தமாக 9 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் லெடெக்கி லாரிசா (சோவியத் யூனியன், ஜிம்னாஸ்டிக்ஸ்), பாவோ நூர்மி (பின்லாந்து, தடகளம்), மார்க் பிஸ் (அமெரிக்கா, நீச்சல்), கார்ல் லூயிஸ் (அமெரிக்கா, தடகளம்) மற்றும் டிரெசெல் (அமெரிக்கா, நீச்சல்) ஆகியோருடன் இணைந்துள்ளார். இவர்கள் எல்லாம் தலா 9 தங்கம் வென்றனர். லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து போட்டியிடுகிறார். மொத்தம் 14 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
