வெடிக்கும் சர்ச்சை.. 81 வீராங்கனைகள் விளையாட மறுப்பு... உதட்டோடு முத்தமிட்ட விவகாரம் !!

 
ஜென்னி ஹார்மோசா
பிஃபா கால்பந்து போட்டியில்   பெண் வீரருக்கு உதட்டில் முத்தமிட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.  இதற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜினாமா செய்ய கோரி பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்றாக, தலைவர் ராஜினாமா செய்யும் வரை தேசத்திற்காக விளையாட மாட்டோம் என ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வீராங்கனை ஜென்னி, ‘கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடும்படி பலகட்ட அழுத்தத்துக்கு ஆளானேன்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். உடனடியாக  ஸ்பெயின் மட்டுமன்றி, உலக கால்பந்து கோப்பையின் ஃபிஃபா வரை ராஜினாமா கோரிக்கை இழுபறியில் நீடிக்கிறது. அதே நேரத்தில் அரசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தும் ரூபியால்ஸுக்கு எதிராக திரும்பியுள்ள்னா. இதில், ஸ்பெயின் தேசிய மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகள் மட்டுமன்றி, பல்வேறு உள்நாட்டு அணிகளின் வீரர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

9-வது மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கடந்த 21-ம் தேதி சிட்னி நகரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.  பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார். 


 


 


முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்ததுடன் உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இச்சம்பவம் இதனால் பெரும் சர்ச்சையாக வெடித்தது.ருபியாலெசை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை மந்திரி ஐரினே மோன்டேரோ  , அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.   சில மணி நேரத்திற்கு பிறகு ஹெர்மோசா சார்பில் ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டது. அதில், ‘உலகக் கோப்பையை வென்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென இயல்பாக நடந்த விஷயம் அது. எனக்கும் சங்க தலைவர் ருபியாலெசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வீராங்கனைகளிடம் எப்போதும் அவர் கண்ணியமுடன் நடந்து கொள்வார்’ எனக் கூறியிருந்தார்.

முத்தம்


இந்நிலையில் முத்த விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில்   ‘நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்’ எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web