நாளை பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடக்கம்: 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்! முறைகேடுகளில் ஈடுபட்டார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!

 
தேர்வு

தமிழகத்தில் நாளை மார்ச் 4 பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு துவங்குகிறது. நாளை துவங்கும் பொதுத்தேர்வுகள் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் சுமார் 8.25 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

தேர்வு

46,700 ஆசிரியர்கள் நாளைய பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வில் நடைப்பெறும் முறைகேடுகளை தடுக்க 4,334 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வு

மாணவர்கள் தேர்வு நடைப்பெறும் அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். பள்ளி நிர்வாகம், மாணவர்களை ஒழுங்கீன செயல்களை ச் செய்ய ஊக்கப்படுத்த முயன்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web