அதிர்ச்சி... கடலில் மிதந்துக் கொண்டிருந்த 844 கிலோ போதைப் பொருட்கள்!
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில், இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் கடலில் சில மூட்டைகள் மிதந்து வந்ததை இலங்கை கடற்படை கவனித்தது. அதன் பின்னர் கடற்படை அதிகாரிகள் 51 மூட்டைகளை கைப்பற்றி, தங்காலை மீன்பிடித்துறைமுகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர்.
மெத்தாம்பேட்டமைன்: 676 கிலோ, ஹெராயின்: 156 கிலோ, ஹாஷிஷ்: 12 கிலோ என மொத்தம் 844 கிலோ போதைப் பொருட்கள் 51 மூட்டைகளில் கடலில் மிதந்துக் கொண்டிருந்தது. இதன் சர்வதேச மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது.

இலங்கை கடற்படை தற்போது இந்த போதைப் பொருட்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
