தமிழகம் முழுவதும் 850 சிறப்பு பேருந்துகள்!! தொடர் விடுமுறையை கொண்டாடுங்க!!

நாளை மறுநாள் செப்டம்பர் 16,17 சனி ஞாயிறு வார விடுமுறை மற்றும் செப்டம்பர் 18 விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பணிபுரியும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை கூடுதலாக 650 பேருந்துகளும், செப்டம்பர் 16ம் தேதி கூடுதலாக 200 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது . இந்த சிறப்புபேருந்துகள் சரியான நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று சேர்வதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் அனைத்து வழித்தடங்கள், பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள எளிதான பயணத்தை மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!