புருஷனோட சேர்த்து வைங்க.. 86 நாட்களாக கர்ப்பிணி பெண் கணவர் வீட்டுவாசல் முன் தர்ணா!!

 
பவித்ரா

சேலம் மாவட்டம் ஓமலூர்  வேலக்கவுண்டனூரில் வசித்து வருபவர்   மோகன்ராஜ். இவர்  சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.  இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும், பி.எஸ்சி மயக்கவியல் படித்த பவித்ராவை 10 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார்.  2023 மே மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது.  இருவரும் சென்னையில் 5  மாதமாக வசித்து வந்த நிலையில், மோகன்ராஜ் தனது  சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக, சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்துள்ளார்.

பவித்ரா

வந்ததில் இருந்து மனைவி பவித்ராவிடம் இருந்து விலகிவிட்டார். ஏற்கனவே 3 மாதம்   கர்ப்பமாக இருந்த பவித்ரா, வேலாக்கவுண்டனூரில் உள்ள கணவர் வீட்டுக்கு வதார்.  கணவரின் பெற்றோர் முருகன், சாராதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை . பவித்ராவை  வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.   இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா   ஜூலை 22ம் தேதி புகார்  அளித்திருந்தார். ஒரு மாதம் விசாரணைக்கு பிறகு   மோகன்ராஜை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து தனது காதல் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்ககோரி,  ஆகஸ்ட் 23  முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.  

பவித்ரா

இதனையடுத்து மோகன்ராஜின் குடும்பத்தினர்  வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிவிட்டார்.  86 நாட்கள் ஆகிவிட்ட நிலையில்   கர்ப்பிணி பெண் கணவரின் வீட்டு வாசலிலேயே வசித்து வருகிறார். அதுவரை   போராட்டம் தொடரும் என தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  வரதட்சனை கேட்டு மனைவியை விரட்டிய வழக்கில் கணவர் மோகன்ராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web