தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்... நிலநடுக்கத்தால் 820 பேர் பலி.. 672 பேர் கவலைக்கிடம்!!

மொரோக்கோவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. பலர் தூக்கத்திலேயே மாண்டனர். காலையில் பலி 300 என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள். இன்னும் மீட்பு பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில், எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை தெரியவில்லை என்கிற தகவல் மேலும் உலுக்குகிறது. இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பலியானவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.
Horrific moment of collapse caught on security camera💔 #Morocco #earthquake #moroccoearthquake #deprem #زلزال #زلزال_المغرب #fas #fas_depremi #morocco #maroc #earthquake pic.twitter.com/lUkG3E4q8z
— Uzair (@uzair_bwp) September 9, 2023
மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கே 44 மைல் தொலைவில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன.வடஆப்பிரிக்க நாடான மொராக்கோ நிலநடுக்கத்தில் நிலநடுக்கத்தில் இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளதாக மொராக்கோ அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், 329 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களின் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அங்கிருந்து ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Horrific moment of collapse caught on security camera💔 #Morocco #earthquake #moroccoearthquake #deprem #زلزال #زلزال_المغرب #fas #fas_depremi #morocco #maroc #earthquake pic.twitter.com/lUkG3E4q8z
— Uzair (@uzair_bwp) September 9, 2023
Tizint tasset Village in Taroudant region. People are under rubbel. Locals need help ASAP !! SOS #morocco #moroccoearthquake @HanaeEster @us_ain pic.twitter.com/XQZaRULe5h
— Soumia ⵙⵓⵎⵉⴰ (@soumiajlo) September 9, 2023
மக்கள் நடந்து கொண்டிருக்கும் போதே கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுகின்றன. மக்கள் தெறித்து ஓடுகின்றனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நிலநடுக்கத்தில் இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளதாக மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 329 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!