ரூ8750 கோடி ஜீவனாம்சம் வேணும்.. ரேமண்ட் நிறுவனர் மனைவி அதிரடி!!

 
ரேமண்ட்

பிரபல ரேமண்ட் நிறுவன  தலைவர் கௌதம் சிங்கானியா. இவர்  நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி இவரிடம் விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் கௌதம் சிங்கானியா மனைவி அவரிடம்   தனக்கும் தங்களது 2 மகள்களுக்கும் ரேமண்ட் குடும்ப சொத்தில் 75 சதவீதம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்தியாவின் பிரபல ஆடை  நிறுவனங்களில் ஒன்று ரேமண்ட். ஆடைகள் வர்த்தகத்தில் முத்திரை பதித்து வரும்  ரேமண்ட், தனது சங்கிலித் தொடர் கடைகள் மூலமாக  வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தற்போது  ஆடை வர்த்தகத்துடன் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களிலும் கொழித்து வருகிறது.  

ரேமண்ட்


கணவர் கவுதம் ஏற்பாடு செய்த தீபாவளி விருந்தில் மனைவி நவாஸ் அனுமதிக்கப்படவில்லை. இதன் பிறகே இருவருக்கும் இருக்கும் பிணக்கு வெளி உலகிற்கு தெரியவந்தது.  இது குறித்து தமது  ட்விட்டரில்  மனைவியுடனான விலகலை கவுதம் சிங்கானியா உறுதி செய்தார்.  இவர்களது குடும்பநண்பர்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைக்க முயன்றனர். எதுவும் பலனளிக்கவில்லை.  அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 பில்லியன் சொத்து வைத்திருக்கும் கவுதம் சிங்கானியா, மனைவியுடனான விவாகரத்தில் குடும்பச் சொத்தில் எத்தனை இழப்பார் என்பது கடந்த நாட்களாக வைரலாக பரவி வருகிறது.  

ரேமண்ட்

தற்போது  கணவரின் சொத்தில் தனக்கும் தங்களது 2 மகள்களுக்குமாக 75 சதவீதத்தை நவாஸ் கோரியுள்ளார்.  இதன் மூலம் சுமார் ரூ8750 கோடி மதிப்பிலான சொத்துக்களை நவாஸ் கேட்கிறார்.  இதற்கு கவுதம் சிங்கானியா குடும்பப் பராமரிப்புக்கான வழக்கமான செலவினங்களையும், மகள்களின் எதிர்காலத்துக்கான செலவுகளையும் ஏற்க முன்வந்துள்ளார்.  அவரது   காலத்துக்குப் பின்னரே சொத்து குடும்ப வாரிசுகளுக்கு போகும் எனக் கூறியுள்ளார். ஆனால் நவாஸ் தனது 75 சதவீதம் பங்கு வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்.  
குடும்பத்தில் பிரச்சினையை வளர்த்து தனது நிம்மதியை குலைத்த கணவரை பழி வாங்க வேண்டும் என  மனைவி நாவஸ் இந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.   

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web