2 வயது சிறுவன் உடலுடன் தெருவில் அமர்ந்த 8 வயது சகோதரன்!! தொடரும் அவலம்!!!

 
சிறுவன்

மத்திய பிரதேசத்தில் மொரீனா மாவட்டத்தில் அம்பா நகரில் பத்பிரா கிராமத்தில் வசிப்பவர் பூஜாராம் ஜாதவ். இவருக்கு 8வயதில் ஒரு மகனும், 2 வயதில் மற்றொரு மகனும் உண்டு.  இதில்  2வது மகனான  2 வயது ராஜாவுக்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டது. வீட்டில் கைமருந்துகள் கொடுத்து பார்த்தார். எதுவும் சரிப்படவில்லை. தொடர்ந்து சிறுவன் வயிற்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தான். உடனே சிறுவனை மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார். சென்றுள்ளார். இவர்களுடன் ஜாதவின் 8 வயது மூத்த மகன் குல்ஷனை அழைத்து சென்றார். 

குழந்தை


மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தான். உதவியற்ற நிலையில் இருந்த பூஜாராம் ஜாதவ், மருத்துவமனை அதிகாரிகளிடம் சிறுவனின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரும் படி கேட்டார்.  அவரது வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை.  அதிகாரிகள் ஆம்புலன்சுக்கு பணம் கேட்டதாகவும், தம்மிடம் பணம் எதுவும் இல்லாததால் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாகவும் பூஜாராம் தெரிவித்துள்ளார்.  இதனால், சிறுவனின் உடலுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்தார். அந்த வழியாக உடலை எடுத்துச் செல்லும் வகையில் வாகனங்கள் எதுவும் சிறிது நேரத்திற்கு வரவில்லை.

ஆம்புலன்ஸ்

அவரிடம் கொடுப்பதற்கு பணமும் இல்லை. வேறு வழியின்றி, மூத்த மகன் குல்ஷணிடம் சிறுவனின் உடலை கொடுத்து விட்டு ஒரு இடத்தில் அமர வைத்தார். அவர் சாலையில் நின்று கொண்டு  வீட்டுக்கு செல்ல வாகனம் எதுவும் அந்த வழியில் வருகிறதா? என தேடி பார்த்தார்.  குல்ஷணும், சகோதரனின் உடலை தனது மடி மீது வைத்து கொண்டு, தந்தை வருவார் என அரை மணிநேரம் வரை தெருவிலேயே பரிதாபமாக அமர்ந்திருந்தார். அந்தப் பக்கமாக சென்ற  பொதுமக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து, பூஜாராம் வீட்டுக்கு சென்று விட்டு விடும்படி அதன் ஓட்டுனரை கேட்டு கொண்டனர். இதுகுறித்து மொரீனா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் மருத்துவர் நாங்கள் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் வாகனம் வரும்போது, பூஜாராம் வெளியே சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web