9 பில்லியன் யூரோ நிதி உதவி! உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு!

 
ஐரோப்பிய யூனியன் உக்ரைன

உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 97-வது நாளாக போர் நடத்தி வருகிறது. ஏவுகணை, குண்டுவீச்சில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போருக்கு முக்கிய காரணமாக நேட்டோ அமைப்பு பார்க்கப்படுகிறது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது தான் போருக்கான முழுமுதற் காரணமாக உள்ளது.

இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்தியர்களுக்கு சிக்கல்! ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய அனுமதியில்லை!

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்கு உடனடி நிதியாக 9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உக்ரைனின் உடனடி பணப்புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார். 

உக்ரைன

மேலும், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கி நீக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web