சிறுத்தைகளை கண்காணிக்க 9 உறுப்பினர்கள் குழு !! மோடி அதிரடி அறிவிப்பு!!

 
சிறுத்தை

இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் செப்டம்பர்  17ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள்  விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் அமைந்துள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

 ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ஆண் சிறுத்தை குட்டிகளும், 3 பெண் சிறுத்தை குட்டிகளும் நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சிறுத்தைகள் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக செப்டம்பர் 25ம் தேதி பிரதமர்  மோடி இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ‘‘பொது மக்கள் பார்வைக்கு சிறுத்தைகள் காண்பிப்பது குறித்து கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வாழும் மொத்த சிறுத்தைகளையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குழுவில் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளது. சிறுத்தைகளின் முன்னேற்றம் மற்றும் சுகாதார நிலையை கண்காணிப்பதில் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web