அடுத்த அதிர்ச்சி.. பர்கர் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 
பர்கர்

கடந்த 2 நாட்களுக்கு முன்  தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி பலியானார். அவருடன்  'சவர்மா' சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 43 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த  சம்பவத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தனியார் உணவகத்திற்கு சீல் வைகக்  கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.  மேலும், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், சமையலர்கள் இருவர் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, மாவட்டம் முழுவதும் 'சவர்மா', கிரில் சிக்கன் விற்பனை செய்யவும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதி


இது தவிர நாமக்கல் முழுவதும்  உணவுப் பாதுகாப்பு அலுவலர்  தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  உணவுப் பாதுகாப்பு அலுவலர், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள சுகாதார அலுவலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக்கடைகள், கறிக்கோழிக்கடைகள் சோதனையிடப்பட்டன.   நாமக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 140   உணவகங்களில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  37 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 82.35 கிலோ உணவுபொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை   நோட்டீஸ் வழங்கப்பட்டது.  அதே நேரத்தில் தனியார் உணவகத்திற்கு கோழி இறைச்சி சப்ளை செய்த   கோழி இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசனும் கைது செய்யப்பட்டார்.  

பர்கர்
இந்தநிலையில், நாமக்கல்லில் மற்றொரு  உணவகத்தில் 9 பேர் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அவர்கள் சாப்பிட்ட சில மணி நேரத்தில் வாந்தி எடுத்தனர். அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், பூங்காநகரில் வசித்து வரும்   18 வயது  இளைஞருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உணவகத்தில் நேற்று சோதனை நடத்திய அதிகாரிகள் கெட்டுப்போன உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.  கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web